Local

தாள் தட்டுப்பாட்டால் பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடுவது நிறுத்தமா?

தாள் (paper) தட்டுப்பாடு காரணமாக பாடசாலை பாடப்புத்தகங்களை அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் பதில் பொது முகாமையாளர் ரஞ்சித் தென்னகோன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை பாடப் புத்தகங்களின் நான்கு மில்லியன் பிரதிகளுக்கு சுமார் 3,000 மெற்றிக் தொன் தாள்கள் தேவைப்படுவதாகத் தெரிவித்த அவர், ஒரு மெட்ரிக் தொன் தாளின் விலை 200,000 ரூபாவிலிருந்து அதிகரித்துள்ளது.

பாடப் பாடப் புத்தகங்களை அச்சிடுவதே அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முக்கிய வருமானம் என்றும், அதை இழந்தால் நிறுவனத்துக்கு சுமார் 1,200 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் அரச நிறுவனங்களுக்கு ஆவணங்களை வழங்குவதற்கு தேவையான ஆவணங்களை பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இரண்டு லொத்தர் சீட்டுக்கள் அச்சிடுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டொலர் தட்டுப்பாட்டால் தாள் இறக்குமதி ஸ்தம்பிதமடைந்துள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading