Local

திங்கள் முதல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள PCR பரிசோதனைக்கூடத்தின் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (13) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் முதலாம் கட்டத்தின் கீழ், வௌிநாடுகளிலிருந்து நாட்டிற்கு அழைத்துவரப்படும் இலங்கையர்கள் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

அனைத்து பரிசோதனைகளையும் இலவசமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள PCR பரிசோதனைக்கூடத்தில் நாளாந்தம் 500 பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும்.

இந்த எண்ணிக்கையை எதிர்வரும் காலத்தில் ஆயிரமாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோதனைக்கூடம் இல்லாமையினால் கடந்த காலங்களில் நாட்டிற்கு அழைத்துவரப்படும் இலங்கையர்களுக்கு வௌியிடங்களில் PCR பரிசோதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading