World

திடீர் மூச்சுத்திணறல் காரணமாக சசிகலா வைத்தியசாலையில் அனுமதி!

பெங்களூர் அக்ரகார சிறையில் சிறையில் சசிகலாவிற்கு திடீர் மூச்சுத்திணறல் மருத்துவக்குழுவினரின் சிகிச்சைக்கு பின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் உள்ள சசிகலா வரும் 27 ம் திகதி விடுதலையாவார் என எதிர்ப்பார்க்கபட்டது.

இந்த நிலையில், சிறையில் உள்ள சசிகலாவிற்கு இன்று திடீரென முச்சுத்திணறல் ஏற்ப்பட்டது.இதனால் மருத்துவக்குழுவினர் சிறையில் உள்ள சசிகலாவிற்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தற்போது சசிகலாவை மேல் சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் விரிவான மருத்துவ அறிக்கை அதிகாரப்பூர்வமாக வராத நிலையில் சசிகலா தொண்டர்கள் மத்தியில் இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading