World

தினமும் 1000 பேர் பலி வீட்டிலிருந்து பணிபுரிய உத்தரவு!

கொரோனா வைரஸ் உலகமெங்கும் தடுப்பூசியின் முயற்சியால் குறைந்து வந்தாலும் அதன் வீரியம் பலருக்கும் இன்று வரை பரவி கொண்டு தான் இருக்கிறது.

இதையடுத்து ரஷ்யாவில் கொரோனா பாதிப்பிற்கு நேற்று ஒரேநாளில் புதிய உச்சமாக 1,015 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், ரஷியாவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 25 ஆயிரத்து 325 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வரும் சூழ்நிலையிலும் மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வம் காட்டாததே ரஷியாவில் வைரஸ் பரவல் அதிகரிக்க காரணம் என மருத்துவத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்ததாத 60 வயதிற்கு மேற்பட்டோர் வீட்டில் இருந்து பணிபுரிய அறிவுறுத்தப்பட்டுள்ளது. சமூகப்பணியாளர்களுக்கு தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தலைநகர் மாஸ்கோ போல நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் புதிய அறிவிப்பை நாளை வெளியிடுகிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading