Local

தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவளித்து வருகிறாராம் நடிகர் சோனு

சினிமா பிரபலங்களுக்கென்ன கோடிகளில் சம்பளம் வாங்குவார்கள் என்ற கூற்று எப்போதும் இருந்தும் வரும் ஒன்று தான். அதே வேளையில் நாட்டு மக்களுக்கு பேரிடர் காலங்களில் அவர்கள் தான் தாராளமாக நிதியை அள்ளி வழங்குகிறார்கள்.
தற்போது கொரோனா நோய் தொற்றால் உலகமே ஸ்தம்பித்து போயுள்ளது. அதே வேளையில் மக்கள் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் பசியால் வாடி வருகிறார்கள். பொருளாதார மந்த நிலையும் எழுந்துள்ளது.
இந்நிலையில் நடிகர் சோனு சூட் மும்பையில் மாநகராட்சியுடன் இணைந்து தினமும் 45 ஆயிரம் பேருக்கு உணவளித்து வருகிறாராம்.

மேலும் அவர் தன்னுடைய அப்பாவின் பெயரில் சக்தி அன்னதானம் என்கிற திட்டத்தை தொடங்கி அதன் மூலம் ஏழை மக்களுக்கு உணவும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி வருகிறாராம்.
மேலும் அவர் தன்னுடைய 6 மாடி சொகுசு ஹோட்டலை கொரோனா சிறப்பு தனி மருத்துவமனைக்காக திறந்து விட்டுள்ளார். ஹிந்தி சினிமாவை சேர்ந்த சோனு தமிழில் கள்ளழகர், நெஞ்சினிலே, மஜ்னு, ராஜா, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி, தேவி 2 என பல படங்களிலும் நடித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading