World

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் உயிரிழப்பு, பலர் காயம்!

சீனாவின் திபெத் மலைப்பகுதியில் நேற்று (22) இரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சீன அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரிக்டர் அளவுகோலில் 7.0 மெக்னிடியூட் வலிமையில் பதிவான இந்த நிலநடுக்கம், சீன நேரப்படி இரவு 10.33 மணியளவில் ஏற்பட்டதாக சீன நிலநடுக்க மையம் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, சீன அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பிராந்தியத்தில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளதுடன், மீட்புப் பணிகளுக்காக அவசரகால மீட்புக் குழுக்களையும் அப்பகுதிக்கு அனுப்பியுள்ளனர்.

நிலநடுக்கத்தால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், 339 வீடுகள் இடிந்து விழுந்துள்ளதாகப் பிராந்தியத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திபெத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 16 பேர் உயிரிழப்பு, பலர் காயம்! | Powerful Earthquake In Tibet 16 Dead Many Injured

இந்தப் பிராந்தியம் அடிக்கடி நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் பகுதியாகும்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஏற்பட்ட 6.2 மெக்னிடியூட் வலிமையிலான நிலநடுக்கத்தில் 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

அதேபோன்று, 2010ஆம் ஆண்டு இப்பகுதியிலிருந்து சுமார் 280 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள சீனாவின் கிங்ஹாய் மாகாணத்தில் 7.1 மெக்னிடியூட் வலிமையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,698 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 300 பேர் காணாமல் போயிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading