World

சவுதியில் மரண தண்டனை வழங்கப்பட்ட தம்பதி கணவன் – மனைவி அல்ல

சவுதியில் பங்களாதேஷை சேர்ந்த இளம்ஜோடி தூக்கிலிடப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில் இருவருக்கும் திருமண உறவு இல்லை என உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

சவுதி அரேபியாவில் தூய்மைப் பணியாளர்களாகப் பணியாற்றிய பங்களாதேஷை சேர்ந்த நஸ்ருல் இஸ்லாம் (வயது 22) மற்றும் ஸ்வீட்டி அக்தர் (25) ஆகிய இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சவுதியில் மரண தண்டனை வழங்கப்பட்ட தம்பதி கணவன் - மனைவி அல்ல ; குடும்பத்தார் வெளியிட்ட தகவல் | Couple Sentenced To Death In Saudi Arabia

மெக்காவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாகக் கூறி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைக்குப் பிறகு. கடந்த அக்டோபர் 14 ஆம் திகதி இளம் ஜோடியான இருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக சவுதி உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில் இவர்கள் கணவன் – மனைவி என்று தகவல்கள் பரவி வரும் நிலையில், இருவரது குடும்பத்தினரும் இதனை மறுத்துள்ளனர்.

நஸ்ருல் இஸ்லாமின் தந்தை அப்துல் பஷீர் கூறுகையில், வறுமையின் காரணமாகக் கடன் வாங்கித் தனது மகனைச் சவுதிக்கு அனுப்பியதாகவும், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது குறித்துத் தங்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் வேதனையுடன் தெரிவித்தார்.

ஸ்வீட்டி அக்தரின் குடும்பத்தினர் கூறுகையில், ஸ்வீட்டிக்கு ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாகவும், அவருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருப்பதாகவும் தெரிவித்தனர்.

நஸ்ருல் இஸ்லாமைப் பற்றித் தங்களுக்குத் தெரியாது என்றும், ஸ்வீட்டி விரைவில் விடுதலையாவார் என்ற நம்பிக்கையில் இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

இதற்கிடையே, மரண தண்டனை குறித்துத் தூதரகம் மூலம் முன்கூட்டியே தகவல் தெரிவிக்காததற்கு சவுதி அரசிடம் பங்களாதேஷ் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக டாக்காவில் உள்ள சவுதி தூதரை நேரில் அழைத்து பங்களாதேஷ் விளக்கம் கேட்டுள்ளது. சவுதி அரசின் இந்த நட​வடிக்கை மனித உரிமை செயற்​பாட்​டாளர்​களாலும், பங்களாதேஷ் மக்​களாலும் கடுமையாக விமர்​சிக்​கப்​பட்டு வரு​கிறது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading