World

ஹார்முஸ் நீரிணையில் ஒரே நாளில் 7 கப்பல்கள் மீது தாக்குதல்

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை கட்டுப்படுத்தி வரும் ஈரான், மீறிச்செல்லும் கப் பல்களை தாக்கி வருகிறது.

அந்தவகையில் ஹார்முஸ் நீரிணையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் 7 எண்ணெய் கப்பல்கள் சேதமடைந்து இருப்பதாக ஈரான் கூறியுள்ளது.

ஹார்முஸ் நீரிணையில் ஒரே நாளில் 7 கப்பல்கள் மீது தாக்குதல் ; ஈரான் தகவல் | 7 Ships Attacked In Hormuz In One Day

இதில் 4 கப்பல்கள் தாக்குதலில் சிக்கியும், 3 கப்பல்கள் கடல் கண்ணி வெடியிலும் சிக்கியும் சேதமடைந்திருப்பதாக ஈரான் புரட்சிகர ராணுவம் தெரிவித்து உள்ளது.

எனினும் அவை எந்த நாட்டு கப்பல்கள் மற்றும் அதில் ஏற்பட்ட உயிர்ச்சேதம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

மேலும் நீரிணை வழியாக எண்ணெய் கப்பல்களை அமெரிக்கா அனுமதித்தால் வளைகுடா நாடுகளில் உள்ள அதன் படைத்தளங்கள் தாக்கப்படும் என ஈரான் எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.

ஈரான் ராணுவம் வெளியிட்ட இந்த தகவல் உண்மை என்றால், ஈரானுக்கு எதிரான போர் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் இத்தனை அதிக கப்பல்கள் சேதமடைந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading