Cinema

திருமணத்திற்காக மதம் மாறிய நடிகை குஷ்பூ?

சுந்தர் சியை திருமணம் செய்துக் கொள்வதற்காக மதம் மாறி விட்டதாக செய்திகள் பரவ அதற்கு தரமான பதிலடியைக் கொடுத்திருக்கிறார் நடிகை குஷ்பூ.

90களில் தமிழ் சினிமாவில் தன் ஆட்சியை கொடி கட்டி பறக்க விட்டவர் தான் குஷ்பு. இவர் நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் இன்னும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது.

தனது அம்சமான முகத்தால் அனைவரையும் கவர்ந்தவர் தான் இவர். மேலும் இவருக்காக கோயில் கட்டும் அளவிற்கு இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளம் இருந்தது.

இவர் மூன்று தலைமுறையாக நடித்துக் கொண்டிருக்கிறார், நடிப்பில் மட்டும் அல்ல, தொழில் முனைவர், தயாரிப்பாளர், சின்னத்திரை நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர், நடுவர் என பன்முகத் திறமைகளைக் கொண்ட குஷ்பு அரசியலையும் விட்டு வைக்காமல் அந்தப் பக்கமும் சென்று இருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு அதிக உடல் எடையைக் கொண்டிருந்த குஷ்பு கொரோனா ஊடரங்கிற்கு பிறகு உடல் எடையைக் குறைத்து மீண்டும் பழைய குஷ்புவாக இன்னும் அழகாக மாறிவிட்டார்.

மேலும், இவர் தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் செயலாற்றி வருகிறார்.

திருமணத்திற்காக மதம் மாற்றம்
இந்நிலையில் சில நாட்களாக குஷ்பூ சுந்தர் சி யை திருமணம் செய்துக் கொள்வதற்காக மதம் மாறிவிட்டார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் படும் வைரலாகி வந்தது.

இதனால் கோபமடைந்த குஷ்பூ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை பதிலாக கூறியிருக்கிறார் அதில் அவர் தெரிவித்ததாவது,

என் திருமணத்தை கேள்வி கேட்பவர்கள், அல்லது நான் என் கணவரை திருமணம் செய்து கொள்ள மதம் மாறிவிட்டேன் என்று கூறுபவர்கள், தயவு செய்து கொஞ்சம் அறிவு பெறுங்கள் என்று கூறுகிறேன்.

துரதிர்ஷ்டவசமாக, நம் நாட்டில் இருக்கும் ‘சிறப்பு திருமணச் சட்டம்’ பற்றி அவர்கள் கேள்விப்பட்டதே இல்லை. நான் மதம் மாறவில்லை அல்லது அவ்வாறு செய்யுமாறு கேட்கப்படவில்லை.

நம்பிக்கை, மரியாதை, சமத்துவம் மற்றும் அன்பின் அடிப்படையில் எனது 23 வருட திருமணம் உறுதியானது. எனவே சந்தேகம் உள்ளவர்கள் தயவு செய்து மலையேறவும். உங்களுக்கு இது தேவையா என்று பதிவிட்டுள்ளார்   

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading