World

திருமணம் செய்தால் கூடுதல் வரி!

சுவிட்சர்லாந்தில் இருவர் தனித்தனியே இருக்கும்போது செலுத்தும் வரியைவிட, அவர்கள் திருமணம் செய்து தம்பதியராகும்போது கூடுதல் வரி செலுத்தவேண்டியுள்ளது.

இதை வாக்கெடுப்பு மூலம் மாற்ற சுவிஸ் மக்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் திருமணம் செய்தவர்கள் கூடுதல் வரி செலுத்தும் ஒரு நிலைமை உள்ளது.

அதாவது தனித்தனியாக இருவர் சம்பாதிக்கும் வருமானத்தை விட, திருமணம் செய்துகொள்ளும்போது, தம்பதியராக இருவரின் வருமானமும் சேர்த்து மொத்தமாக கணக்கிடும்போது அதிக வருவாய் வருவதால், திருமணம் செய்த தம்பதியர், தாங்கள் தனியாக இருந்தபோது செலுத்தியதைவிட கூடுதல் வரி செலுத்தவேண்டியதாகிறது.

இதை சுவிஸ் மக்கள் திருமண அபராதம் என்று அழைக்கிறார்கள்.

இப்படி, திருமணம் ஆவதால் அதிக வரி செலுத்தவேண்டிய நிலை குறித்து பல அரசியல்வாதிகள் நீண்ட காலமாக குரல் கொடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில், இந்த விடயம் குறித்து முடிவெடுப்பதற்காக, அது தொடர்பாக மக்கள் வாக்களிக்க இருக்கிறார்கள்.

ஆனால், வாக்கெடுப்பு 2024ஆம் ஆண்டில்தான் நடைபெற உள்ளது. அதுவரை மக்கள் பொறுத்திருக்க வேண்டியதுதான்!  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading