World

திருமணம் செய்யாமல் சட்டப்படி குழந்தை பெற்றுக் கொள்ள அனுமதி!

சீனாவின் சீச்சுவான் (Sichuan) மாநிலத்தில்  திருமணமாகாத தனிநபர்கள் பிள்ளை பெற்றுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது. 

குறைந்து வரும் பிறப்பு விகிதத்தைச் சமாளிக்க இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 

இதுவரை திருமணமானவர்களே பதிவு செய்யலாம் எனும் நிலை மாறி அடுத்த மாதம் 15ஆம் திகதி முதற்கொண்டு திருமணம் செய்யாதவர்களும் அரசாங்கத்துடன் பதிவு செய்து கொள்ளலாம் எனக் கூறப்பட்டது. 

60 ஆண்டுகளில் ஆகக் குறைவான பிறப்பு விகிதத்தைச் சீனா கடந்தாண்டு சந்தித்தது. 

குழந்தைப் பராமரிப்புக்கான ஆதரவுத் திட்டத்தை விரிவுபடுத்துவதோடு தாயார்களுக்குக் கூடுதல் ஆதரவு வழங்குவதன் மூலம் சீன அரசாங்கம் இந்த நிலைமையை மாற்ற முயற்சி செய்கிறது 

சீனா முன்பு ஒரே பிள்ளை கொள்கையைப் பின்பற்றியதால் அதன் பிறப்பு விகிதம் குறைந்துள்ளதாக நம்பப்படுகிறது. 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading