World

திருமண நாளிலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்த மணப்பெண்!

ஈரானில், தன் திருமண நாளிலேயே துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார் ஒரு மணப்பெண்.

Mahvash Leghaei (24) என்ற அந்த இளம்பெண்ணின் திருமணத்தைக் கொண்டாடுவதற்காக அவரது உறவினர்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட, அதில் ஒரு குண்டு Leghaeiயின் தலையில் பாய்ந்துள்ளது.

உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட Leghaei, கோமா நிலைக்குச் சென்று பின்னர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Firuzabad நகரில் நடந்த இந்த துயர சம்பவத்தில், திருமணத்துக்கு வந்திருந்த இரண்டு ஆண்களும் காயமடைந்துள்ளார்கள்.

திருமண நாளன்றே கொல்லப்பட்ட Leghaei மீது பாய்ந்த குண்டு, அவரது உறவினர் ஒருவர் சுட்ட வேட்டைத் துப்பாக்கியிலிருந்து வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. Leghaei மீது குண்டு பாய்ந்ததும் அந்த உறவினர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பின்னர் பொலிசார் அவரைக் கைது செய்துள்ளனர்.

அந்த 36 வயது நபருக்கு துப்பாக்கியை சரிவர கையாளத் தெரியாததாலேயே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஈரானில் திருமண விழாக்களின்போது இதுபோல் துப்பாக்கியால் வானை நோக்கிச் சுடுவது வழக்கமான ஒரு நிகழ்வாக உள்ளது. ஆனால், அது சட்டப்படி குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading