Local

திருமண நிகழ்வுகள், உணவக சேவைகளை முன்னெடுத்துச் செல்ல அனுமதி!

பல்வேறு துறைகளினதும் சேவைகளை வழமையான முறையில் முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லும் நோக்கில் குறித்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, திருமண நிகழ்வுகள், உணவகங்கள், பாரிய அளவிலான ஹோட்டல்கள், திரையரங்குகள் போன்ற சேவைகளை வழமையான முறையில் முன்னெடுக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து முன்னெடுக்கும் Event Management குழுக்களுக்கும் அவர்களது சேவைகளை முன்னெடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

எனினும், சுகாதார வழிகாட்டல்கள் உரிய முறையில் பின்பற்றப்படாவிட்டால், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தொற்றுப் பரவல் அதிகரிப்பைத் தடுக்க அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading