World

திவாலாகும் நிலையில் பாகிஸ்தான்!

பாகிஸ்தானில் கடந்த ஆண்டு பெய்த வரலாறு காணாத மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் அங்கு 80 சதவீதத்துக்கும் அதிகமான பயிர்கள் நீரில் மூழ்கி நாசமாகின.

இதன் காரணமாக அங்கு கோதுமை உள்ளிட்ட பல்வேறு உணவு தானியங்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை ஈடு செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து உணவு தானியங்களை இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும் அங்கு உணவு தானியங்களின் விலை தாறுமாறாக எகிறியது.

இதனால் அரசின் சார்பில் மானிய விலையில் உணவு தானியங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அங்கும் ஏராளமானோர் முண்டியடித்து சென்று வாங்கும் நிலை உள்ளது. இதற்கிடையே மாவு வாங்க சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இந்த நிலையில் தற்போது அந்த நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதனால் அடுத்த 3 வாரங்களில் பாகிஸ்தான் திவாலாகும் நிலையை எதிர்கொள்ள நேரிடும் என சர்வதேச பொருளாதார வல்லுனர்கள் எச்சரித்துள்ளனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading