Entertainment

துணை இல்லாதவர்கள் காதலர்களை வாடகைக்கு எடுக்க அனுமதி!

சீனாவில் காதலர்களை வாடகைக்கு எடுக்கலாம் என மகிழ்ச்சி தகவல் ஒன்று துணை இல்லாதவர்களுக்கு வெளியாகியுள்ளது.

சீனப் புத்தாண்டுக் காலம் வந்துவிட்ட நிலையில் உற்றார் உறவினர்களின் வீடுகளுக்குச் சென்று கொண்டாட்டங்களில் ஈடுபடுவது வழக்கமாகும்.

எனினும் துணையின்றி சிலர் இருக்கக்கூடும் என்பதனால் உறவினர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் போகலாம்.

அவர்களது வாயை அடைக்கச் சிலர் போலியான காதலர்களைத் தற்காலிகமாக வாடகைக்கு எடுக்கின்றனர்.

அவர்களுடன் சேர்ந்து புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்குச் செல்ல சில நிறுவனங்கள் வழியமைத்துக் கொடுக்கின்றன.

சீனப் புத்தாண்டின்போது போலிக் காதலியாகச் சென்ற ஒருவர் தமது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

“ஆரம்பத்தில் மிகவும் படபடப்பாக இருந்தது. சிறிதளவு தயார்ப்படுத்திக்கொண்டால் அது உதவக்கூடும். உதாரணத்திற்குக் குடும்பத்தினர் கேட்கவிருக்கும் கேள்விகளுக்கு முன்கூட்டியே பதில்களைத் தயாரித்து வைக்கலாம். அதோடு, உடனுக்குடன் யோசித்து செயல்படுவது முக்கியம்” என்றார்.

2 மணிநேரத்திற்குக் காதலரை வாடகைக்கு எடுப்பதற்குக் குறைந்தது 100 வெள்ளியாவது தேவை என குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading