World

துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 16 பேர் உயிரிழப்பு!

ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரம் துபாய். இந்த நகரத்தில் அல்-ரஸ் என்ற பகுதி உள்ளது. இந்த பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர்.

இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு, மீட்புக்குழுவினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்திற்கு பின் தீ மூழுமையாக அணைக்கப்பட்டது. கட்டிடத்தில் இருந்து பலர் மீட்கப்பட்டனர். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், இந்த தீ விபத்தில் சிக்கி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 16 பேர் உயிரிழந்தனர். இதில் 4 பேர் இந்தியர்கள் ஆவர். தமிழ்நாட்டை சேர்ந்த இமாம்காசிம் அப்துல் காதர் (வயது 43), ஹுடு சலியகொண்டு (வயது 49), கேரளாவை சேர்ந்த தம்பதியான ரிஜேஷ் கலங்கடன் (வயது 38), அவரது மனைவி ஜெஷி கண்டமங்கலதா (வயது 32) ஆகியோர் இந்த தீ விபத்தில் உயிரிழந்தனர். துபாயில் தீ விபத்தில் 4 இந்தியர்கள் உள்பட 16 பேர் உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading