LocalWorld

தூங்கினால் 18500 டொலர் சம்பளம் நாசாவில் புதிய வேலைவாய்ப்பு!

உலகிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஜெர்மன் விண்வெளி மையத்தில் செயற்கை ஈர்ப்பு விசையில் மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது என்ற ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, இந்த ஆராய்ச்சிக்கு 12 ஆண்கள் மற்றும் 12 பெண்கள் தேவைப்படுகின்றார்கள். இவர்களுக்கு என்ன வேலையென்றால் 60 நாட்களை படுக்கையில் கழிக்க வேண்டும் அதாவது சாப்பிடுவதும் விளையாடுவதும் தான் மேலும் அவர்களுக்கு அளிக்கும் வேலைகள் எல்லாம் படுக்கையில் இருந்தடியே செய்ய வேண்டும்.

மற்றைய நேரங்களில் நன்றாக தூங்க வேண்டும். இதற்கான பயிற்சி, மருத்துவ சிகிச்சை, 2 மாத பயிற்சி என மொத்தம் 89 நாள்களை இதற்காக செலவிட வேண்டும்.

இந்த ஆராய்ச்சிக்கு வரும் தன்னார்வாலர்களுக்கு 18 ஆயிரத்து 500 டொலர் ஊதியமாக வழங்கப்பட உள்ளது.

விதிக்கப்பட்ட நிபந்தனைகள்
இந்த ஆராய்ச்சி ஜெர்மனியில் உள்ள கலோக்னியில் உள்ள ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இவர்களுக்காக தனியாக படுக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சிக்கு வரும் தன்னார்வலர்களுக்கு விதித்துள்ள ஒரே நிபந்தனை ஜெர்மன் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். மேலும் குறித்த நபர்களுக்கு 24 வயது முதல் 55 வயது வரை மட்டுமே இருக்க வேண்டும்.

இந்த ஆய்வின்போது எலும்புகள், தசைகள் மற்றும் தசைநார்கள் காயப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட உள்ளது.

இவ்வாறு தூங்கும் தொழிலுக்கும் பலரும் ஆர்வம் காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading