CinemaLocal

தூதுவராக இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் நியமனம்!

பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் தூதுவராக, இந்திய திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் நியமிக்கப்பட்டுள்ளார்.

திரைப்படம், தொலைக்காட்சி துறையில் திறமையான கலைஞர்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் பாப்டா என்ற அமைப்பு தொடங்கப்பட்டது.

பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் என்ற இந்த நிறுவனம் திரைப்படத்துறையில் உள்ள திறமையானவர்கள் 5 பேரை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கி கௌரவப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இந்த அமைப்பின் தூதுவராக, பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சினிமா துறையில் திறமைசாலிகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் பாப்டா அமைப்புடன் இணைந்து பணியாற்றுவதில் தாம் மிகவும் மகிழ்ச்சி அடைவதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பெருமை பொங்க தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் அகடமி ஆப் பிலிம் அன்ட் டெலிவி‌ஷன் ஆர்ட்ஸ் அமைப்பின் இந்த முடிவை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பட்டாளம் பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் பாராட்டியும், வாழ்த்தியும் பதிவிட்டும் வருகின்றனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading