World

தென்கொரிய மக்களின் வயது இரண்டால் குறைகிறது!

தென்கொரியா இயற்றியுள்ள புதிய சட்டத்தால், அந்நாட்டில் அனைவருக்குமே ஒன்று அல்லது இரண்டு வயது குறையும். இந்த சட்டம், தென்கொரியாவில் தற்போது வழக்கத்தில் உள்ள 2 பாரம்பரிய வயது கணக்கிடும் நடைமுறைகளையும் கைவிட்டு, சர்வதேச நடைமுறையை ஏற்க வழிவகை செய்கிறது.

தென்கொரியாவில் தற்போதுள்ள பாரம்பரிய வயது கணக்கீடு நடைமுறைகளில் ஒன்றின்படி, ஒவ்வொருவருக்கும் பிறக்கும் போதே ஒரு வயதாகிவிடுகிறது. அதாவது, தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் போதே இந்த வயது கணக்கீடு தொடங்கிவிடுகிறது.

மற்றொரு நடைமுறையில், ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி ஒன்றாம் தேதி அனைவருக்கும் ஒரு வயது கூடி விடுகிறது. இந்த வயது கணக்கீடு ஒருவரின் பிறந்த நாளை கணக்கில் கொள்ளாது, ஜனவரி ஒன்றாம் தேதியானாலே அனைவருக்கும் ஒரு வயதை கூட்டிவிடுகிறது. இதன்படி, ஜனவரியில் பிறந்தவருக்கும், டிசம்பர் மாதம் பிறந்தவருக்கும் ஒரே நேரத்தில் ஒரு வயதைக் கூட்டிவிடுகிறது.

இந்த முரண்பாடுகளையும், சர்வதேச அளவில் பயன்படுத்தும் போது ஏற்படும் குழப்பங்களையும் தவிர்க்கவே புதிய சட்டத்தை தென்கொரியா கொண்டு வந்துள்ளது. அதன்படி, பிறந்த நாள் அடிப்படையில் வயதைக் கணக்கிடும் சர்வதேச நடைமுறை தென்கொரியாவில் நடைமுறைக்கு வந்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading