Local

தென் கொரியாவில் வாழும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுத்த தூதரகம்

தென்கொரியாவில் வாழும் இலங்கையர்களை மிகவும் அவதானமாக இருக்குமாறு அங்குள்ள இலங்கை தூதரகம் எச்சரித்துள்ளது.
கொவிட் 19 எனப்படும் புதிய கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு மேற்கொள்ள கூடிய நடவடிக்கை தொடர்பில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருகிறது. நேற்றைய தினம் மாத்திரம் 52 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாாக அந்த நாட்டு சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த நாட்டில் மொத்தமாக 156 கொரோனா தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் கொரோனாவின் முதல் மரணமும் தென் கொரியாவில் பதிவாகியுள்ளது.
கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் அதனை கட்டுப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க தென் கொரியா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போது வரை தொழிலுக்காகவும் சுற்றுலா பயணத்திற்காகவும் சுமார் 25000 இலங்கையர்கள் தென்கொரியாவில் உள்ளதாக அந்நாட்டிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய வைரஸ் பரவும் அவதானம் தொடர்பில் இலங்கையர்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவதானமாக இருக்குமாறு அந்த நாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading