தெற்காசியாவில் Damro Furniture எப்படி உருவானது..?
ஒரு சிறிய தொழிற்கூடத்தில வெறும் இரும்பு கதிரைகளை மட்டுமே செய்யத் தொடங்கிய ஒரு சாதாரண நிறுவனம், தெற்காசியாவிலேயே மிகப்பெரிய பர்னிச்சர் தயாரிப்பாளராக எப்படி மாறியது?
அதுதான் தம்ரோவின் அசுர வளர்ச்சியின் வரலாறு.
ஆரம்பத்தில் சில ஊழியர்களோட ஒரு சிறிய தொழிலாக ஆரம்பமான தம்ரோ நிறுவனம், இன்று இலங்கை மற்றும் இந்தியா முழுவதிலும் நூற்றுக்கணக்கான காட்சியறைகளுடன் மிக பிரம்மாண்டமான வலையமைப்பைக் கொண்டிருக்கிறது.
இந்த வெற்றிப் பயணம் 1986 ஆம் ஆண்டு ஆரம்பமானது. அதன் ஸ்தாபகரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான தமித்த ரமநாயக்க, எளிய முறையில் ஸ்டீல் கதிரைகளை உற்பத்தி செய்து இந்த வணிகத்தைத் தொடங்கினார். காலப்போக்கில் பிளாஸ்டிக் மற்றும் மரத்தாலான தளபாடங்கள் தயாரிப்பில் நிறுவனம் காலடி எடுத்து வைத்தது. தரமான தயாரிப்புகளை மக்களுக்கு ஏற்ற நியாயமான விலையில் வழங்கி, உறுதியான நேரடி வாடிக்கையாளர் சேவையை வழங்கியதுதான் இதன் அத்திவாரமாக அமைந்தது.
இலங்கையில் 170-க்கும் அதிகமான காட்சியறைகளை நிறுவி தன் நிலையை வலுப்படுத்திய நிறுவனம், அடுத்ததாக சர்வதேச சந்தையை நோக்கி நகர்ந்தது.
2000 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய-இலங்கை தாராள வர்த்தக ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தபோது, அதன் வரிச் சலுகைகளைப் பயன்படுத்தி இந்தியாவில் முதன்முதலாக கால்பதித்த இலங்கை பர்னிச்சர் நிறுவனம் தம்ரோதான்.
சென்னையில் அமைக்கப்பட்ட முதல் காட்சியறையிலிருந்து தொடங்கிய பயணம், இன்று பத்து மாநிலங்களுக்கு மேல் பரவி 100-க்கும் அதிகமான காட்சியறைகளாக விரிவடைந்திருக்கிறது. இந்திய அரசாங்கத்திடம் 12,000 மில்லியன் இந்திய ரூபாயை முதலீடு செய்வதற்கான நேரடி அனுமதியைப் பெற்ற மிகச் சில வெளிநாட்டு நிறுவனங்களில் தம்ரோவும் ஒன்று. இதன் மூலம் இந்தியாவில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான திருப்தியான வாடிக்கையாளர்களை ஈட்டி, அந்நாட்டு மக்களால் சொந்த நாட்டு பிராண்ட் போல போற்றப்படும் இடத்தை தம்ரோ பிடித்திருக்கிறது.
இந்த பிரம்மாண்ட வர்த்தகத்தை நிலைநிறுத்த, ஒரு வலுவான விநியோகக் கட்டமைப்பை நிறுவனம் உருவாக்கியது. மிரிகம, லொல்லுவகொட தொழிற்சாலை வளாகத்தில் 310 மில்லியன் ரூபாய் செலவில் பிரத்யேக ஏற்றுமதி அலுவலகத்தை அமைத்து, ஏற்றுமதி பணிகளுக்காக மட்டும் 1.063 மில்லியன் சதுர அடி இடத்தை ஒதுக்கியது. ஆண்டுதோறும் இந்தியாவிற்கு மட்டும் 2,000-க்கும் அதிகமான நாற்பது அடி கொள்கலன்களில் பர்னிச்சர்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
அதேநேரம், விநியோகத் தடையைத் தவிர்க்க இந்தியாவில் பெங்களூரில் இயங்கும் சொந்த தொழிற்சாலை மற்றும் உள்ளூர் தயாரிப்புகள் மூலம் 30 வீதமான உற்பத்தியையும் பூர்த்தி செய்கிறது.
பர்னிச்சர்களோடு நின்றுவிடாமல், சலவை இயந்திரங்கள், குளிர்சாதனப் பெட்டிகள் போன்ற வீட்டு உபயோக மின்சாதனங்கள் தயாரிப்பிலும் நிறுவனம் இறங்கியது. அத்துடன், 2017 ஆம் ஆண்டு புஸ்ஸல்லாவ மற்றும் அகலவத்த பெருந்தோட்ட நிறுவனங்களின் பங்குகளைக் கையகப்படுத்தி, புகழ்பெற்ற லபுகெல்லே தோட்டம் உட்பட தேயிலை உற்பத்தியிலும் தன் வணிகத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தியது. அதுமட்டுமல்லாமல் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் மெரினா மோல் வணிக வளாகத் திட்டம் வரையிலும் இதன் வணிக எல்லை பரந்து விரிந்திருக்கு.
1986-ல் ஒரு சிறிய தொழிற்கூடத்தில் ஆரம்பித்து, தரத்திலும் விடாமுயற்சியிலும் கவனம் செலுத்தி, எல்லைகளைத் தாண்டி தெற்காசியாவின் மிகப்பெரிய பர்னிச்சர் உற்பத்தி அடையாளமாக உயர்ந்திருக்கும் தம்ரோ, இலங்கை வணிக வரலாற்றில் ஒரு தவிர்க்க முடியாத மைல்கல்.
#Damro #DamroFurniture #BusinessStory #SriLanka

You must be logged in to post a comment.