நரகத்திற்கு செல்ல நான் விரும்பவில்லை..சொர்க்கத்திற்குத்தான் செல்வேன்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் CBS தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் அளித்த நேர்காணல், அவரது வழக்கமான அரசியல் உரையாடல்களிலிருந்து மாறுபட்டு அவரது தனிப்பட்ட நம்பிக்கைகள் மற்றும் உணர்வுகளை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதன் போது டிரம்பிடம், நிருபர் ரோஸ் டவுதாட் மரணம் மற்றும் வாழ்க்கை பற்றிய கேள்விகளை எழுப்பினார்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த நேர்காணலின் போது, 80 வயதான டிரம்பிடம், இந்த கொலை முயற்சிகளில் இருந்து தப்பியது தனது சொந்த மரணத்தைப் பற்றிய பார்வையை மாற்றியிருக்கிறதா என்று டவுதாட் கேட்டார்.
தொடர்ந்து, “நீங்கள் இறந்த பிறகு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?” என்ற நேரடி கேள்வியையும் முன்வைத்தார். சற்று யோசித்த அதிபர், நான் மறைந்த பிறகு என்னை அனைவரும் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என கூறினார். அத்துடன் தான் ஒரு ஆன்மீகவாதி, எனவே தத்துவார்த்த ரீதியாக நான் சொர்க்கத்திற்குத்தான் செல்வேன் என்று நம்புகிறேன்.
நரகத்திற்கு செல்ல நான் விரும்பவில்லை என்றும் டிரம்ப் கூறினார். நீங்கள் இறந்து அடுத்த வாழ்க்கைக்குள் நுழைகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் சொர்க்கத்திற்குள் நுழைவதற்கு, ஜேம்ஸ் கோமி, நான்சி பெலோசி அல்லது பல ஆண்டுகளாக நீங்கள் வெறுப்பை வெளிப்படுத்திய அனைவர் மீதும் அன்பையும் மன்னிப்பையும் செலுத்தினால் மட்டும் போதும் என்ற நிலை வந்தால், உங்களால் அதை செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? என நிருபர் கேட்டார்.
அதற்கு பதிலளித்த டிரம்ப், “உண்மையாகச் சொன்னால், என்னால் நிச்சயமாக அதை செய்ய முடியாது. ஏனெனில் எனது சில எதிரிகளை நான் உண்மையாகவே வெறுக்கிறேன், அது எப்போதும் அப்படியேதான் இருக்கும் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

You must be logged in to post a comment.