Local

தேசிய வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சிறுவர்களின் எண்ணிக்கை 67.2 கோடியாக அதிகரிக்கும்!

கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகள்  குறித்து யுனிசெப்பும். சிறுவர்களை பாதுகாப்போம் என்ற அமைப்பும் இணைந்து ஆய்வு மேற்கொண்டன. அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனா நோய் தொற்று பரவலினால் பல்வேறு நாடுகளிலும் பொருளாதாரம் சரிந்துள்ளது. இதன் காரணமாக 2020ம் ஆண்டு இறுதியில் மேலும் 8.6 கோடி சிறுவர்கள் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவார்கள், இது வழக்கத்தை காட்டிலும் 15 சதவீத அதிகமாகும்.பொருளாதார நெருக்கடியில் இருந்து குடும்பங்கள் உடனடியாக பாதுகாக்கப்படா விட்டால், குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் தேசிய வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் சிறுவர்களின் எண்ணிக்கை 67.2 கோடியாக அதிகரிக்கும்.

இதில் மூன்றில் இரண்டு பங்கு சிறுவர்கள் சஹாரா ஆப்ரிக்கா மற்றும் தெற்காசியாவில் வாழ்கின்றனர். ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியா முழுவதிலும் உள்ள நாடுகளில் உள்ள பிராந்தியங்களில் 44 சதவீதம் வரை இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும். குறுகிய காலத்திற்கு பசி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் கூட குழந்தைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading