Local

தேர்தலில் சம்பந்தன் படுதோல்வி அடைவார்!

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அவருடைய சொந்த மாவட்டமாகிய திருகோணமலையில் தமிழ் மக்கள் தேசிய முன்னணி இம்முறை தோற்கடிக்கும் என்று அந்த முன்னணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமாகிய விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஊடகமொன்றுக்கு அவர் வழங்கிய நேர்காணலில் மேற்கண்டவாறு கூறினார்.

அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறியதாவது,

தேசிய கட்சிகள் மீது கிழக்கு மாகாணத்தில் மக்களிடையே இருக்கும் நம்பிக்கை குறைந்துவிட்டது. பல பிரச்சினைகளையும் முஸ்லிம் – தமிழ் மக்களிடையே பேசித்தீர்க்க வேண்டும். அனைவரும் வட-கிழக்கு மாகாண தமிழ் பேசும் மக்களாக சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ்ப்பாணத்திலும் மக்கள் எங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதி அணியாக தேர்ந்தெடுத்திருக்கின்றார்கள். மாற்றம் எமக்கு சாதகமாக அமைந்துள்ளது. வன்னிலும் இதே நிலைமை உள்ளது என்றார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading