Local

தேர்தல் விஞ்ஞாபனத்தை மொட்டு கட்சி வெளியிடாதாம்!

2020 ஆகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான, தேர்தல் விஞ்ஞாபனத்தை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெளியிடாது என்று அதன் பிரதான செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ‘சௌபாக்கிய நோக்கு’ கொள்கைத் திட்டமே மக்களிடம் முன்வைக்கப்பட்டு, அதனை தொடர்ந்து முன்னெடுக்க ஆதரவு கோரப்படும் எனவும் கூறியுள்ளார்.

அத்துடன், ஆசன மட்டத்திலான கூட்டங்களையே மொட்டு கட்சியினர் இம்முறை அதிகம் ஏற்பாடு செய்யவுள்ளனர். ஜனாதிபதி, பிரதமர் உட்பட ஆளுங்கட்சியின் உயர்மட்ட பிரமுகர்கள் இக்கூட்டங்களில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்படும் என செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார். பிரமாண்டமாக நடைபெறும் பிரசார கூட்டங்களை கைவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading