Local

தொண்டமான் குடும்பத்தார் மீது சமூக ஊடகங்களில் வரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானவை!

மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் அவரின் குடும்பத்தார் மீது சேறு பூசும் விதமாக அண்மையில் முகப்புத்தகம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக பரப்பபடும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.” என்று இ.தொ.கா தெரிவித்துள்ளது.

” கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற்ற ஒப்பந்தங்களுடன் அமைச்சரின் குடும்ப உறுப்பினர்களை சம்பந்தப்படுத்தி கட்டுக்கதைகள் பரப்பப்படுவது எவ்விதத்திலும் ஏற்று கொள்ளமுடியாத விடயமாகும்.

குறுகிய அரசியல் இலாபம் பெரும் நோக்கில் பணத்துக்கு அமர்த்தப்பட்ட சமூக வலைத்தள விசமிகளால் இவ்வாறான போலி செய்திகள் பரப்பபடுவதை வன்மையாக கண்டிப்பதோடு இவர்களுக்கு எதிராக நடவடிக்கைகள்  எடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.” – எனவும் இ.தொ.கா ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

தகவல் – இ.தொ.கா. ஊடகப்பிரிவு

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading