Local

தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் சுதத் சமரவீர  இடமாற்றம்!

இந்த நிலையில் அவர் டெங்கு ஒழிப்பு  பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்

இதேவேளை   தொற்றுநோய் தடுப்பு பிரிவின்  பதில் பணிப்பாளராக கடமையாற்றிய  விசேட வைத்தியர் சமிதா கினிகே  தொற்றுநோய் தடுப்பு  பிரிவின் புதிய  பணிப்பாளராக   நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ  தலைமையிலான   கொரோனா தடுப்பு செயலணி கூட்டத்தில் இந்த தீர்மானம்  எட்டப்பட்டுள்ளது

இதேவேளை கொவிட் -19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் செயற்பாடுகளில் தரவுகளை மறைப்பதாக அரச வைத்திய  அதிகாரிகள் சங்கம், அரச மருத்துவ தொழில்நுட்ப நிபுணர்கள்  சங்கம் உள்ளிட்ட பலர் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர மீது குற்றச்சாட்டுக்களை   முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நாட்டில் கொரோனா  பரவலை கட்டுப்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கும் தரப்பினர்  பொறுப்பின்றி  செயற்பட்டுள்ளதாக  அவர்கள் குற்றம் சுமத்தியிருந்தனர்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading