Local

தொற்றை தடுக்க 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டுமாம்!

உலகம் முழுவதும் பரவும் தொற்றை தடுக்க 2 டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டால், டெல்டா வைரசில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம் என இங்கிலாந்து பொது சுகாதாரத்துறை விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். உலக மக்களை மிரட்டிவரும் கொரோனா தொற்று, புதிது புதிதாகவும் உருவெடுத்து குழப்பத்தை ஏற்படுத்துகிறது. அந்த வரிசையில், அதிகமாக பரவும் தன்மையுள்ள டெல்டா வகை சார்ந்த ‘சார்ஸ்-கொரோனா தொற்று 2’ மேலும் உருமாறி, ‘டெல்டா பிளஸ்’ ஆக மாறியுள்ளது என்று விஞ்ஞானிகள் அதிர்ச்சியளித்துள்ளனர்.

இதனையடுத்து, ஆறுதல் அளிக்கும் வகையில் இந்த வகை, இந்தியாவில் தற்போது குறைவாகவே காணப்படுவதால் உடனடி கவலைக்கு அவசியம் இல்லை என்றும் கூறுகின்றனர். முதன் முதலில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட, மிக மோசமான 2-வது அலைக்கு முக்கிய காரணமான டெல்டா வகை கொரோனா வைரஸ்தான் மேலும் உருமாறி புதிய டெல்டா பிளஸ் வகையாக தோன்றியுள்ளது.

தற்போதைய புதிய மாற்றம், சார்ஸ் கொரோனா தொற்று  2-ன் கூர்முனை புரதத்தில் ஏற்பட்டுள்ளதாகவும், அது மனித செல்களில் நுழையவும், பாதிப்பை ஏற்படுத்தவும் இந்த புதுவகை வைரசுக்கு உதவுவதாகவும் டெல்லியில் உள்ள மரபியல் மற்றும் ஒருங்கிணை உயிரியல் நிறுவன விஞ்ஞானி வினோத் ஸ்காரியா தெரிவித்துள்ளார். . இப்போதைக்கு புதிதாக மாற்றம் அடைந்துள்ள கொரோனா வகை குறித்து அதிகம் கவலைப்பட தேவையில்லை என்றாலும், அதைத்தொடர்ந்து கண்காணித்து வருவது அவசியம் என்பதே விஞ்ஞானிகள், மருத்துவ நிபுணர்களின் ஒட்டுமொத்த கருத்தாக உள்ள

இந்த நிலையில், ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலையை 96 சதவீதம் நோயாளிகளுக்கு தடுத்து விடுவதாகவும், அஸ்ட்ராஜெனேக்கா தடுப்பூசி போட்டுக் கொண்டால், மருத்துவமனைகளில் அனுமதிக்க வேண்டிய நிலையை 92 சதவீதம் நோயாளிகளுக்கு தடுத்து விடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் முதன் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா வைரஸ், இங்கிலாந்தில் அதிகமாக பரவி வரும் நிலையில், இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளது….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading