Local

தோனியின் பிறந்தநாளுக்கு பாடலைப் பரிசளித்த பிராவோ!

இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்த எம்.எஸ்.தோனியின் 39-வது பிறந்த நாளை இன்று அவரது ரசிகா்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனா்.
இவரது பிறந்த நாளுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி உள்பட கிரிக்கெட் நட்சத்திரங்கள், பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனா்.

ஐபிஎல் லீக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ள தோனியை அவரது ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கின்றனா்.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரும், சிஎஸ்கே அணியில் நம்பிக்கை நட்சத்திரமுமான டுவைன் பிராவோ தோனிக்கு பிறந்தநாள் பரிசாக பாடல் ஒன்றை பாடியுள்ளார்.

“Number 7” என தோனியின் ஜெர்சி நம்பரை குறித்து பதிவிட்டுள்ள இப்பாடல், தோனி பிறந்த இடம் முதல், அவர் குவித்துள்ள வெற்றிகளின் வரலாறு வரை அனைத்தையும் நினைவு கூறும் வகையில் உள்ளது.

இந்தப் பாடலில் தோனி தனக்கு சகோதரன் என பிராவோ உணர்ச்சி பொங்கக் கூறியுள்ளார். இந்தப் பாடலை சிஎஸ்கே அணியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தோனி – பிராவோவின் ஆழமான உறவை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவிக்கின்றனா்.

இந்தப் பாடலின் இணைப்பு

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading