Cinema

தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் தற்கொலை!

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். அவருக்கு வயது 34. ஊரடங்கு காலத்தில் அவர் தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அவருடைய தற்கொலை செய்தி கேட்டு போலீசார் அவரது வீட்டிற்கு விரைந்தனர். 

நடிகரின் தற்கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. சில நாட்களாக அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது.இவர் இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது

சுசாந்த் சிங் தனது பாந்த்ரா வீட்டில் தூக்கில் தொங்கியதாக போலீசார் தகவல் அளித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே முழு விவரமும் தெரிய வரும்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading