Cinema

நடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி!

தமிழ் சினிமாவில் அலைகள் ஓய்வதில்லை படத்தில் அறிமுகமாகி 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்தவர் நடிகர் கார்த்திக்.

இவர், தற்போது பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். வில்லனாகவும் நடிக்கிறார்.

இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் கார்த்திக், வீட்டில் உடற்பயிற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்துள்ளார்.

இதனால், அவருக்கு காலில் பலத்த அடிபட்டு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்ட போது, சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால் எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால், டாக்டர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். கார்த்திக் தற்போது தீ இவன், அந்தகன் ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading