Cinema

நடிகர் சித்தார்த்துக்கு திடீரென அறுவை சிகிச்சை அதிர்ச்சியில் திரையுலகம்!

நடிகர் சித்தார்த்துக்கு லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெறுவதாக அவரது இயக்குனர் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சித்தார்த் சமீபத்தில் நடித்துள்ள மகா சமுத்திரம் திரைப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழியிலும் வெளியாகயுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.

ஆனால் அதில் சித்தார்த் கலந்து கொள்ளவில்லை. இதனால் இயக்குநர் அஜய்பூபதியிடம் செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பியபோது சித்தார்த் ஒரு அறுவை சிகிச்சைக்காக லண்டன் சென்றுள்ளார்.

இதன் காரணமாக தான் அவரால் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியவில்லை என்று விளக்கம் கொடுத்தார். ட்விட்டரில் சமூக பிரச்சனைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததால் பாஜகவினர் சிலர் இவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர்.

அதுமட்டும் இல்லாமல் அவர் இறந்துவிட்டதாக சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவியது குறிப்பிடத்தக்கது.     

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading