Cinema

நடிகர் சிவகார்த்திகேயன் படப்பிடிப்பில் பரபரப்பு அபராதம் விதித்த அதிகாரிகள்!

டான் படத்திற்கான ஷூட்டிங் பொள்ளாச்சி அருகே ஆனைமலை ஆற்றங்கரைப் பகுதியில் இன்று நடைபெற இருந்தது.

பட குழுவினர் ஆனைமலை ஆற்றங்கரைப் பகுதிக்கு சென்றுள்ளனர்.

எனினும், அனுமதியின்றி சிவகார்த்திகேயனின் ‘டான்’ திரைப்படம் படப்பிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், முறையாக அனுமதி பெறாமல் படப்பிடிப்பை நடத்தியதால் வருவாய்த்துறையினர் படப்பிடிப்பு குழுவினருக்கு ரூ.19,400 அபராதம் விதித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading