Cinema

நடிகர் சூர்யாவுடன் 14 வயதில் நடித்த நடிகையின் இப்போதைய நிலை

பிரபல நடிகை ஸ்ருத்திகா நடிகர் தேங்காய் ஸ்ரீனிவாசனின் பேத்தி என்பதால் தன்னுடைய 13-வது வயதிலேயே சினிமா வாய்ப்புகளை பெற்றார். ஆனால், என் மகளுக்கு சின்ன வயது ஹீரோயினாக நடிக்கும் அளவுக்கு அவளுக்கு அனுபவம் இல்லை என்று அவரது பெற்றோர் மகளை நடிக்க அனுப்ப மறுத்து விட்டனர். அதனை தொடர்ந்து தனது 14-வது வயதில் நடிகர் சூர்யாவின் ஸ்ரீ படத்தில் முண்ணணி ஹீரோயினாக நடித்தார்.

இவர் தொடர்ந்து ஆல்பம் என்ற படத்தில் நடித்த அவருக்கு சினிமா வாய்புகள் குவிந்தன. ஆனால், அவற்றை எல்லாம் இவர் நிராகரித்தார்.பின் நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் மாதவன் நடிப்பில் வெளியான நள தமயந்தி படத்தில் ஹீரோயினாக நடித்தார்.இறுதியாக,தித்திக்குதே என்ற தமிழ் படத்தில் நடித்தவர் நான் படிக்கவேண்டும். சினிமாவில் அப்புறம் வந்து நடிச்சுக்குறேன், எனக்கு படிப்பு தான் முக்கியம் என சினிமாவை விட்டே இவர் கிளம்பி விட்டார்.

மொத்தமாக இதுவரை இவர் நான்கு திரைப்படங்கள் இதுவரை நடித்து உள்ளார். தனது கல்லூரி படிப்பை முடித்த இவர் எந்த ஒரு திரைப்படங்களிலும் நடிக்காமல் உள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading