World

நடிகர் பிரகாஷ்ராஜ் வைத்தியசாலையில் அனுமதி!

பிரகாஷ்ராஜ் படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்த போது எலும்பு முறிவு ஏற்பட்டதால் தற்போது அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ் சென்னையில் படப்பிடிப்பில் கலந்து வந்தபோது அவர் கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரகாஷ் ராஜ் தற்போது மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் சிற்றம்பலம் படத்தில் நடித்து வருகிறார்.

அப்போது படப்பிடிப்பில் கீழே விழுந்து காயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது உடனடியாக முதலுதவிக்காக அவர் சென்னையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். எனவே பிரகாஷ்ராஜ் தனது டாக்டர் நண்பரிடம் சென்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் “ஒரு சிறிய விபத்து, ஒரு சிறிய எலும்பு முறிவு. எனது நண்பர் குருவா ரெட்டியின் பாதுகாப்பான கைகளில் எனது உடலை தேற்றிக்கொள்ள அறுவை சிகிச்சை செய்து கொள்வதற்காக ஹைதராபாத் செல்கிறேன். விரைவில் நலமடைவேன். கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை என்னை உங்களை நினைவில் வைத்திருங்கள்” என்று தெரிவித்துள்ளார்  

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading