Cinema

நடிகர் மாதவனின் மகன் சாதனை!

டேனீஷ் ஓப்பன் நீச்சல் போட்டியில் நடிகர் மாதவனின் மகன் சாதனை படைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இருக்கும் முண்ணனி நடிகர்களுள் ஒருவரான மாதவனின் மகன், வேதாந்த். இவர் டேனீஷ் ஓப்பன் நீச்சல் போட்டி – 2022 ல் கலந்து கொண்டு விளையாடி வந்தார். அதிலும் இவர் விளையாடி வந்த 1500 மீட்டர் பிரிவின் இறுதிப் போட்டியில் 10 பேர் கலந்து கொண்டனர். இதில் இரண்டாவது இடத்தைப் பிடித்த வேதாந்த் வெள்ளிப்பதக்கம் வென்றார். 

இதுகுறித்து நடிகர் மாதவன், “கடவுளின் கருணையாலும், அனைவருடைய ஆசிர்வாதத்தாலும் சாஜன் பிரகாஷ் மற்றும் வேதாந்த் மாதவன் ஆகிய இருவரும் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கத்தை வென்றுள்ளனர். இந்த நேரத்தில் பயிற்சியாளர் பிரதீப் குமாருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading