Sports

நடிகர் மாதவனின் மகன் 5 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனை!

மலேசியாவில் நடந்த நீச்சல் போட்டிகளில் தனது மகன் ஐந்து பதக்கங்களை வென்றுள்ளதாக நடிகர் மாதவன் பதிவிட்டுள்ளார்.

பிரபல நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் நீச்சல் போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களை வென்று வருகிறார்.

இந்த வாரம் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற நீச்சல் போட்டிகளில், ஐந்து பிரிவுகளில் பங்கேற்று 5 பதக்கங்களை வேதாந்த் வென்றார்.

இதனை அவரது தந்தையும், நடிகருமான மாதவன் தனது சமூக வலைதள பக்கத்தில் பெருமையுடன் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில்,

‘கடவுளின் கிருபையுடனும், உங்களின் வாழ்த்துக்களுடனும் வேதாந்த் இந்தியாவுக்காக ஐந்து தங்கப் பதக்கங்களை 2 PB உடன் 2023 மலேசிய சாம்பியன்ஷிப்பில், இந்த வார இறுதியில் கோலாலம்பூரில் வென்றார். மகிழ்ச்சி மற்றும் நன்றிகள்’ என கூறியுள்ளார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading