Cinema

நடிகர் விஜய் படத்தை பார்க்காதீர்கள் மதுரை ஆதீனம் அதிரடி அறிவிப்பு!

பிரபல தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் தளபதி 66 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, ஜெயசுதா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைக்கும் இப்படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்று குடும்ப பின்னணி படமாக இருக்கும் என படக்குழு ஏற்கனவே தெரிவித்திருந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

 

இந்நிலையில் மதுரை ஆதீனம் நடிகர் விஜய் நடிக்கும் படங்களை பார்க்க வேண்டாம் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “இந்துக்களை அவமதிக்கும் வகையில் நடிகர் விஜய் பேசிய திரைப்படங்களை பார்க்காதீர்கள். கடவுளை இழிவுபடுத்தி பேசுபவர்களை எதிர்த்தால் என்னை சங்கீ என்கிறார்கள்” எனக் கூறியுள்ளார். 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading