Cinema

நடிகர் ஷாருக்கான் கனவை நிறைவேற்றிய மகன்!

சமீபத்தில் மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

இதில் நடந்த கேளிக்கை விருந்து நிகழ்வில், போதைப் பொருட்களுடன் 8 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

இவர்களில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானும் ஒருவர், இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நான்கு வருடங்களாக போதைப்பொருள் பயன்படுத்தியதை ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் தற்போது ஷாருக்கானின் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த நேர்காணலில் ஷாருக்கான், தன் மகன் அவன் விருப்பத்திற்கு இருக்கலாம். பெண்கள் பின்னால் போகலாம். புகை பிடித்துக் கொள்ளலாம் ஏன்…? போதை மருந்துகளைக் கூட பயன்படுத்தலாம் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த வீடியோவுக்கு பலரும், உன் மகன் செய்த தவறுக்கு நீங்கள் தான் காரணம்? உங்கள் கனவை 20 வருடங்களில் நிறைவேற்றிவிட்டார், உங்களை பெருமைப்படுத்திவிட்டார் என்றெல்லாம் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading