Cinema

நடிகைக்கு தமிழ் கற்றுக் கொடுக்க சென்று காதல் வலையில் வீழ்ந்த நடிகர் பாக்கியராஜ் !

தமிழ் சினிமாவில் சிறந்த திரைக்கதை ஆசிரியர் என்ற பெயர் எடுத்தவர் நடிகர் பாக்கியராஜ். இவருடைய சினிமாக்களில் சில்மிஷம் நிறைந்த காட்சிகளே அதிகம் இடம்பெற்றிருக்கும்.

மேலும், அந்த காலக்கட்ட சினிமாக்களிலேயே பெண் ரசிகைகள் கொண்ட நடிகர்களில் இவரும் ஒருவர். என்னதான் பல ஹிட் படங்களை கொடுத்தாலும், இவர் நடித்திருந்த அந்த முருங்கை சீன் காமெடி தான் அனைவருக்கும் நியாபகம் வரும்.

முதலில் இயக்குனராக தடம்பதித்த பாக்கியராஜ் பின்னர் ஹீரோவாகவும் பல வசூல் வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இந்த நிலையில், பாக்யராஜ் இயக்குனர் ஆவதற்கு முன்பே அசிஸ்டன்ட் இயக்குனராக வலம் வந்த நேரத்தில் நடிகை பிரவீணாவுக்கு தமிழ் கற்றுகொடுக்க அனுப்பப்பட்டாராம்.

ஆனால், நம்மாளு தான் பெண்கள் விஷயத்தில் கில்லாடியாச்சே. பிரவீனாவை தன்னுடைய காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டார் பாக்யராஜ். பிரவீனா பாக்யராஜுடன் பாமா ருக்மணி என்ற படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.

இதன் பின்னர், நல்ல முறையாக இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு வந்த நேரத்தில் திடீரென நடிகை பிரவீணாக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. பாக்கியராஜ் பல மருத்துவ செலவுகளை செய்து விட்டார். இறுதியில் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

சில வருடங்கள் கழித்து பிரவீனா இறந்துவிட்டார். அதன் பிறகுதான் பாக்யராஜ் தன்னுடன் நடித்த பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தகவலை சர்ச்சை பயில்வான் சாமர்த்தியமாக தெரிவித்துள்ளார்.     

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading