World

நடிகையாகிறார் பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா!

இந்தியாவைச் சேர்ந்த பிரபல டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்ஸா (Sania Mirza ) எம்.டி.வி நிஷேத் அலோன் டுகதர்’ (MTV Nishedh Alone Together) என்ற இணையத் தொடரில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அதன்படி காசநோயின் பாதிப்பை மையமாக வைத்து உருவாகிவரும் இணையத்தொடரிலேயே அவர் நடிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சானியா மிர்ஸா “காசநோய் நமது நாட்டில் தீராத வியாதியாக உள்ளது. இந்த நோயில் சிக்கியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் குறைவானவர்களாக உள்ளனர். கொரோனாத் தொற்றுக் காலத்தில் நோய் பாதிப்பு இன்னும் அதிகமாக உள்ளது.

மேலும் ,இந் நோய் பற்றிய விழிப்புணர்வை எம்டிவி நிஷேத் அலோன் டுகதர் தொடர் அழுத்தமாக பதிவு செய்யும். நான் இந் தொடரில் பங்கேற்பது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறேன்” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading