Cinema

நடிகை கீர்த்தி சுரேஷிற்கு விரைவில் திருமணம்!



நடிகை கீர்த்தி சுரேஷ் விரைவில் திருமணம் செய்து கொண்டு சினிமாவுக்கு ஓய்வு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அறிமுகம் எதுவும் தேவையில்லை. பிரபல நடிகை மேனகா மற்றும் பிரபல தொழிலதிபர் சுரேஷ் குமார் ஆகியோரின் இளைய மகள்தான் கீர்த்தி சுரேஷ்.

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினி முருகன் என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் இவரை தமிழ்நாட்டில் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆக்கியது.

மட்டுமில்லாமல் தொடர்ந்து பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வரும் இவர் நடிகர் விஜய்க்கு ஜோடியாக சர்க்கார் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கையாக அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கீர்த்தி சுரேஷின் பெற்றோர் இவருக்கு திருமணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வட்டம் அடிக்கின்றன.

கீர்த்தி சுரேஷின் தந்தை பிரபல அரசியல் கட்சியுடன் நெருக்கமான தொடர்பில் உள்ளவர். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷிற்கு அரசியல் சார்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து வைக்க முடிவெடுத்து முடிவெடுத்துள்ளதாகவும் விரைவில் கீர்த்தி சுரேஷின் திருமணம் நடக்கும் எனவும் விவரமறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பெற்றோரின் இந்த முடிவுக்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால், திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை. இணையத்தில் தீயாய் பரவி வரும் இந்த தகவல்கள் குறித்து நடிகை கீர்த்தி சுரேஷ் தரப்பிலிருந்து விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை கீர்த்தி சுரேஷ் அல்லது அவருடைய பெற்றோர்களும் கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading