Cinema

நடிகை தமன்னாவுக்கு கிடைத்த அங்கீகாரம்

ஜப்பானின் புகழ்பெற்ற அழகு சாதன நிறுவனமான ஷிசிடோவின் இந்திய தூதராக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலமாக தமன்னாவிற்கு ஷிசிடோவின் முதல் இந்திய தூதர் என்ற பெருமை கிடைத்துள்ளது.

இதனையடுத்து நடிகை தமன்னாவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இது குறித்து நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில்,

தங்களது தரத்தை 100 ஆண்டுகளுக்கு மேலாக பராமரித்து வரும் ஷிசிடோ நிறுவனத்துடன் தற்போது இணைந்திருப்பது மிகவும் மகிழ்சி.

அழக்கு என்பது வெளிப்புற தோற்றம் மட்டுமல்ல. தன்னம்பிக்கை மற்றும் அதிகாரம் பெறுவதும் கூட என தான் நம்புவதாக குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading