Cinema

நடிகை திரிஷா படுகாயம்!

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ஹீரோயினாக நடித்து வருபவர், திரிஷா. தற்போது அவருக்கு 39 வயது முடிந்துள்ளது. இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாகத்தில் குந்தவை என்ற கேரக்டரில் நடித்திருந்த அவருக்கு நல்ல பாராட்டு கிடைத்தது. இப்படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்று நடித்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தில் இருந்து விடுபட, சில நாட்கள் ஓய்வு எடுப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்றார்.

பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு இந்தியா திரும்ப நினைத்த அவர், திடீரென்று தனது காலில் காயம் ஏற்பட்டு, கட்டு போடப்பட்டுள்ள போட்டோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். போட்ேடாவுக்கு கீழே, ‘வெக்கேஷன் சென்றதற்காக எனக்கு கிடைத்த பரிசு இது’ என்று குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, நேற்று சென்னையில் நடந்த ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் சக்சஸ்மீட்டில் அவர் கலந்துகொள்ளவில்லை. வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading