Cinema

நடிகை வனிதா விஜயகுமாருக்கு 4 ஆவது திருமணம்?

நடிகை வனிதா விஜயகுமாருக்கு 4-வது திருமணம் செய்துக் கொள்ளும் யோகம் இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கும் நிலையில், திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. 

சில தினங்களுக்கு முன்பு வனிதா 4-வது திருமணம் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு வனிதா மறுப்பு தெரிவித்தார்.

பின்னர் வனிதாவின் எதிர்காலத்தை கணித்த ஜோதிடர் ஒருவர், அவருக்கு மீண்டும் திருமணம் நடக்கும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் நடிகை வனிதா, தனது சமூக வலைத்தள பக்கத்தில் பவர்ஸ்டார் சீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் திருமண வாழ்த்துகள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும், சிலர் இது திரைப்படத்திற்காக எடுத்த புகைப்படமாக கூட இருக்கலாம் என்று கூறி வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading