Cinema

நயன்தாராவின் 75வது படத்தை இயக்கும் புதுமுகம்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக  இருந்த நீலேஷ் கிருஷ்ணா எழுதி இயக்குகிறார்.

படத்தை நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் உடன் இணைந்து ஜீ ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. ஃபேமிலி என்டர்டெய்னர் படமான இது அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் வகையில் இருக்கும் என கூறப்படுகிறது.

நயன்தாரா, ஜெய், சத்யராஜ், கே.எஸ். ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, அச்யுத் குமார் என பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள இந்தப் படத்தில் குமாரி சச்சு, ரேணுகா, கார்த்திக் குமார், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பை, படக்குழுவினர் சென்னையில் நடத்தி முடித்துள்ளனர்.

அடுத்தக் கட்டப் படப்பிடிப்பு திருச்சியிலும், சென்னையின் சில பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படம் இதுவரை நயன்தாரா சோலோ ஹீரோயினாக நடித்தப் படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading