Cinema

நயன்தாராவின் 75 ஆவது படத்தில் மேலும் 8 பிரபலங்கள் இணைவு!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம்வரும் நயந்தாராவின் 75ஆவது திரைப்படத்தில் இணைந்துள்ள பிரபலங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் சங்கரின் உதவியாளர் நீல் கிருஷ்ணா இயக்கத்தில் ஜீ ஸ்ரூடியோஸ் மற்றும் டிரைடண்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகவுள்ளது.

‘ராஜா ராணி‘ திரைப்படத்திற்குப் பின்னர், நயன்தாராவுடன் இந்தத் திரைப்படத்தில் நடிகர் ஜெய் இணைந்தமை ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தற்போது, சத்தியராஜ், கே.எஸ்.ரவிகுமார், ரெடின் கிங்ஸ்லி, குமாரி சச்சு, அச்சுதகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நயன்தாராவின் 75ஆவது திரைப்படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமன் இசையில் உருவாகவுள்ள இந்தத் திரைப்படத்தின் ஒளிப்பதிவை சத்ய சூரியன் மேற்கொள்ளவுள்ளதுடன் படத்தின் படப்பிடிப்புப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading