Local

நல்லூர் திருவிழாவை முன்னிட்டு விதிக்கப்பட்டுள்ள தடை!

நல்லூர் கந்தசுவாமி கோயில் மகோற்சவ திருவிழா நாட்களின் போது, குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபட தடைவிதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (08) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டத

அந்தவகையில் திருவிழா நேரங்களில் வெளிமாவட்டங்களில் இருந்து வருகைதருவோரால் ஆலய வீதிகளில் குழந்தைகளை வைத்து யாசகத்தில் ஈடுபடுவதை தடுக்கும் முகமாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

இது தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி காவல்துறைமா அதிபருக்கும்  யாழ்ப்பாண தலைமை அலுவலக காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கும் அறிவிக்க தீர்மானிக்கப்பட்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading