Local

நாடு இருளடைவதற்கு முன் தடுப்பு நடவடிக்கை அவசியம்

நாடு முழுதும் கொரோனா பரவல்: அதிர்ச்சி தகவல் அம்பலம்!

இலங்கை முழுவதிலும் கொரோனா தொற்று தீவிரவாக பரவிவிட்டதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தி, அரசாங்கம் தேர்தலை இலக்காகக் கொண்டு உண்மைத் தகவல்களை மறைத்துவருவதாக குற்றஞ்சாட்டியுள்ளது.

கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலை வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம் பலருக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் அந்த அறிக்கையை அரசாங்கம் நிராகரித்து போலியான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக விமர்சனம் வெளியிட்டுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, தேர்தல் பிரசாரங்களை ஏன் அரசாங்கம் நிறுத்தியது என்றும் கேள்வி எழுப்பினார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், கண்டி மாவட்ட வேட்பாளருமான லக்;ஸ்மன் கிரியெல்ல, கண்டியிலுள்ள தனது இல்லத்தில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தினார்.

இதன்போது உரையாற்றிய அவர், இலங்கை முழுவதிலும் கொரோனா தொற்று பரவிவிட்டதாகவும், நாடு இருளடைவதற்கு முன் தடுப்பு நடவடிக்கை அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading