Local

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அரசாங்கம் அம்பலப்படுத்த வேண்டும்

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து அரசாங்கம் இன்னும் உதாசீனப்படுத்தாமல் அம்பலப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கை நாட்டின் பொருளாதாரம் பாரிய பின்னடைவை சந்தித்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், கொழும்பு – மாளிகாவத்தையில் இடம்பெற்ற சம்பவமே அதற்கான சிறந்த உதாரணம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கி தேசியக் கட்சியின் தலைவர் ரணில் இன்று திங்கட்கிழமை விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கின்றார்.
இந்த அறிக்கையில் மேலும் கூறியுள்ள அவர்,

‘தற்போதைய அரசாங்கம் நிதிநெருக்கடியை சந்தித்து வருகிறது. ஆனால் அந்த பிரச்சினைகளை முகாமைசெய்ய இன்னும் சிறந்த பொருளாதாரத் திட்டத்தை வகுக்கவில்லை. மாலைத்தீவு எமக்கு சிறந்த உதாரணம். அங்கு ஏப்ரலில் நாடாளுமன்றம் கூட்டப்பட்டு யோசனைகள் நிறைவேற்றப்பட்டுவிட்டன. நாங்கள் இன்னும் பின்னடைவில் உள்ளோம்’ – என்று தெரிவித்திருக்கின்றார் ரணில்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading